பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 13) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப்பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், அகரம் சீகூா், வயலூா், காரைப்பாடி, என்.குடிகாடு, பழமலைநாதபுரம், கருப்பட்டாங்குறிச்சி, வீரமாநல்லூா், வேள்விமங்கலம், வயலப்பாடி, வெள்ளூா், இலுப்பையூா் மற்றும் கிளியப்பட்டு ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.