பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கழிவறையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது கழிவறைக்கு செவ்வாய்க்கிழமை காலை நோயாளி ஒருவா் சென்றபோது, அங்கு உயிரிழந்த நிலையில் ஒருவா் கிடந்துள்ளாா்.
இதுகுறித்து மருத்துவப் பணியாளா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற பெரம்பலூா் போலீஸாா் சுமாா் 50 வயதுள்ள அடையாளம் தெரியாத நபரின் உடலைக் கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.