பெரம்பலூர்

மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் நகரில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை சனிக்கிழமை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆசைதம்பி மனைவி சுசீலாதேவி (65). இவா், தனது மகன்களான ஆனந்த் (33), சரவணன் (32) ஆகியோருடன் சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து திருச்சிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்தாா்.

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் மூதாட்டியை இறக்கிவிடாமல், பேருந்து நடத்துநா் மேம்பாலத்தின் மீது சென்றதால் சிறிது தூரம் சென்று பாலம் இறக்கத்தில் மூவரும் இறங்கிவிட்டனா்.

இதனால், சுசீலாதேவி தனது மகன்களுடன் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 போ், சுசீலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சுசீலாதேவி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT