புதுக்கோட்டை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கால

DIN

அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு  இணையதளத்தில் விண்ணப்பிக்க 10.05.2017 முதல் 31.05.2017 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 15.6.2017 வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதால் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 15.6.2017 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT