புதுக்கோட்டை

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கசிஐடியு வலியுறுத்தல்

பொன்னமராவதி பாரத ஸ்டேட் வங்கி தங்களது கிளையில் 10 ரூபாய் நாணயங்களை பெற பொன்னமராவதி சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

DIN

பொன்னமராவதி பாரத ஸ்டேட் வங்கி தங்களது கிளையில் 10 ரூபாய் நாணயங்களை பெற பொன்னமராவதி சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் சங்க கிளைச் செயலர் அ. தீன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொன்னமராவதியில் உள்ள சிறுவியாபாரிகள் பொதுமக்களிடம் வியாபாரம் செய்து, 10 ரூபாய் நாணயங்களை பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் தங்களது சேமிப்புக் கணக்கில் செலுத்த செல்லும்போது வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி பணியாளர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தெளிவாக அறிவுறுத்திய நிலையிலும் இவ்வாறு நாணயங்களை பெற மறுப்பது வருத்தத்திற்குரியது.
எனவே இந்நிலை தொடர்ந்தால் சிறுவியாபாரிகளை திரட்டி பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT