கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் கிராமத்தில் புதிதாக மதுபானக் கடை திறப்பதைக் கண்டித்து கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எஸ்.ரஜினி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ். சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலை மூக்கையன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் ராஜா, ஆசைத்தம்பி, சாந்தி, சக்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாமியய்யா, கருணாநிதி, மற்றும் சுயஉதவி குழுவினர், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.