புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி, சிறைத்துறை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சார்ந்த ராஜமோகன் மகன் சுரேஷ்குமார்(25). இவர் கடந்த 2.10.2016-ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புதுகை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2.6.2017 அன்று மதியம் உணவுக்காக அறையை விட்டு வெளியே வந்த சுரேஷ்குமார், சிறையிலிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெயபாரதி மாவட்ட சிறைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில்,துணை சிறை அலுவலர் செல்வதுரை, உதவி சிறை அலுவலர் அன்பழகன் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படையினர், தப்பிச்சென்ற விசாரணைக் கைதி சுரேஷ்குமாரைத் தேடி வந்தனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பதுங்கி இருந்த கைதி சுரேஷ்குமாரை புதன்கிழமை கைது செய்து திருச்சி சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.