புதுக்கோட்டை

காட்டுநாவல் பொன்னியம்மன் கோயில் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுநாவல் ஊராட்சியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி

DIN

கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுநாவல் ஊராட்சியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டின் திருவிழா மே 8 அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழா நாட்களில் மண்டகப்படிதாரர்களால் தினமும் அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தேன், தயிர், திரவியம் உள்ள அபிஷேக, ஆபாதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காட்டுநாவல் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

SCROLL FOR NEXT