புதுக்கோட்டை

சித்தன்னவாசலில் ரூ.1.80 கோடியில் புதிய சாலை: சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் தார்ச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன்.     

DIN

சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் தார்ச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன்.     
 புதுகை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தினை  ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர்  வெல்லமண்டி என். நடராஜன் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.  
இதில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:
சுற்றுலா துறையை மேம்படுத்த ஏடிபி எனப்படும் மத்திய,மாநில அரசுகள் நிதி உதவியுடன் உதேஷ் தர்ஷன், பிரஷாத் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. சித்தன்னவாசல் சுற்றுலா தலத்துக்கு டெலஸ்கோப், சில்வர் கைப்பிடி, மின் விளக்கு, சாலை வசதி,தங்கும் இடம்,கழிப்பறை, விளம்பர பலகை உள்ளிட்ட வசதிகள்
ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், சித்தன்னவாசல் குடைவரை கோயில் முதல் சித்தன்னவாசல் வரை ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை வசதி ஏற்படுத்தப்படும். மேலும், சுற்றுலாத் துறையில் சில இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுகாதாரத்தில் முதன்மையான மாநிலம், சிறப்பான சட்டம் ஒழுங்கு, மின்மிகை மாநிலம் ஆகிய காரணங்களால் சுற்றுலா துறையில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் மாநிலமாக திகழ்கிறது என்றார்.
இதில், எம்எல்ஏ ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை),திட்ட இயக்குநர் எம். சந்தோஷ் குமார் (மா.ஊ.வ.மு),கோட்ட பொறியாளர் செந்தில் (நெ.து),கூட்டுறவு சங்கத்தலைவர். வி. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT