புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை கேட்பு முகாம் வரும் சனிக்கிழமை (செப். 9) பின்வரும் வட்டங்களைச் சார்ந்த கிராமங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இதில், தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அதன்படி, வரும் சனிக்கிழமை புதுக்கோட்டை வட்டம் பெருங்களூர், ஆலங்குடி வட்டம் கொத்தகோட்டை, திருமயம் வட்டம் பெருங்குடி, குளத்தூர் வட்டம் உடையாளிப்பட்டி, இலுப்பூர் வட்டம் புதூர் (முக்கணாமலைப்பட்டி) , கந்தர்வகோட்டை வட்டம் நடுப்பட்டி, அறந்தாங்கி வட்டம் எட்டியத்தளி, ஆவுடையார்கோவில் வட்டம் தீயத்தூர், மணமேல்குடி வட்டம் பொண்ணகரம், பொன்னமராவதி வட்டம் குமாரபட்டி, கறம்பக்குடி வட்டம் வடக்களூர், விராலிமலை வட்டம் செரளாப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ள குறை கேட்பு முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.