சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மண்டல அளவிலான மேசைப் பந்துப் போட்டிகளில் புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கும்பகோணத்தில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான மண்டல அளவிலான மேசைப் பந்துப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவி நாச்சம்மை முதலிடத்தைப் பெற்றார். இதையடுத்து நாச்சம்மையை பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜா குமாரி, உடற்கல்வி ஆசிரியர் கனகவேல் ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டினர்.