புதுக்கோட்டை

ஆவணத்தான்கோட்டையில் சட்டஅறிவு விழிப்புணர்வு முகாம்

DIN

அறந்தாங்கி அருகிலுள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு  ஆணைக்குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம். அமிர்தவேலு தலைமை வகித்தார். அவர்,  இலவச சட்ட உதவி மற்றும் சட்டம் சார்ந்த உதவிகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைத்துப் பேசினார்.  பள்ளித் தலைமையாசியை கலைச்செல்வி, வழக்குரைஞர்கள் பி.லோகநாதன், கே.எம்.எஸ்.செந்தில்குமார், அருண்ராஜ், பழனியப்பன், உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். நிறைவில் இளநிலை நிர்வாக உதவியாளர் வி.தேவி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

SCROLL FOR NEXT