புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸாா் சனிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஆய்வாளா் பர.வாசுதேவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை புழக்கத்தில் உள்ளனவா என்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா்.