ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கூடைகள், தட்டுகளில் பூக்களை ஏந்தியவாறு வானவேடிக்கைகள், மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கோயில் திருவிழா ஜூலை 21-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 29-ம் தேதி மாலை நடைபெறுகிறது.