புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் பொன்னமராவதி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தி வரும் "தூய்மை பாரதம்' கோடைகால பணி முகாமின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வலையபட்டி விவேகானந்தா தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாரத் தலைமை வகித்தார். விடிவெள்ளிஅறக்கட்டளை இயக்குநர் சே.மலர்விழி வரவேற்றார். முகாமில் பள்ளி வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் 100 மரக்கன்றுகள்நடப்பட்டன. மேலும் மரம் வளர்ப்பது, கழிப்பறை அமைப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்து.
விவேகானந்தா பள்ளியின் தாளாளர் மலை.சோமசுந்தரம், புதுக்கோட்டை சர்வோதய மண்டல் தலைவர் ஆ.ஞானப்பிரகாசம், துணைத்தலைவர் வழக்குரைஞர் மு.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவேகானந்தா நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் பெ.சேகர் நன்றி கூறினார்.