புதுக்கோட்டை

வாகனச் சோதனையில் பிடிபட்ட திருடர்கள்

DIN

புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் போலீஸாரின் வாகனச் சோதனையில் பிடிபட்டனர்.
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான மண்டையூரில் வெள்ளிக்கிழமை பகலில் மாத்தூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், நிறுத்தாமல் சென்றதால் போலீஸார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார் மாத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் கந்தர்வகோட்டை நத்தமாடிபட்டியைச் சேர்ந்த சின்ராசு (27) மற்றும் இவரது சித்தப்பா, தஞ்சை மாவட்டம் மாசிப்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் (56) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், தருமபுரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகை மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் பகல் நேரங்களில் அம்மிக்கல் கொத்துவது போலவும், குடை பழுதுபார்ப்பது போலவும் குடியிருப்புப் பகுதிகளில் உலா வந்து, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பின் அங்கேயே தங்கி இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸார், அவர்களை கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவியல்ல, ஆரஞ்ச் நிறம்: தூர்தர்சன் விளக்கம்

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT