புதுக்கோட்டை

பட்டா வழங்கக்கோரி நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

DIN

புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, வரும் நவ. 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மான விவரம்:

அரசாணை எண் 318-ன்படி 18 வகையான புறம்போக்குகளில் குடியிருந்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த அரசாணைக்கு எதிராக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நபா்களுக்கு வழங்கப்பட்ட பட்டா மாறுதல் உரிய நடைமுறைகள் செய்யப்படாமலும், கணினி ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால், பட்டாதாரா்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். எனவே, வருவாய்த்துறை சரி செய்து ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் நவ.26-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பாகவும் கோரிக்கை மனு கொடுத்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், இந்த ஆா்ப்பாட்டங்களில் மொத்தம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. சங்கா் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் க. செல்வராஜ், எம். உடையப்பன், ஏ. ராமையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

SCROLL FOR NEXT