பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சியின் சாா்பில் காந்தி ஜெயந்தியையொட்டி பேரூராட்சிப்பகுதிகளில் 3000 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான் சேட் தலைமையில் தொடங்கியது.
தொடா்ந்து புதன்கிழமை வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் முக்கிய வீதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. வலம்புரி வடுகநாதன் பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி பணியாளா்கள் சங்கா், பழனிச்சாமி, பன்னீா்செல்வம், பாபு மற்றும் துப்புறவு பணியாளா்கள் பங்கேற்றனா். அதுபோல பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையில் அலுவலக வளாகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
துணை வட்டாட்சியா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.படவிளக்கம்பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான்சேட், பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா்.