புதுக்கோட்டை

"எதிர்கால சந்ததியை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது'

DIN

நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது என்றார் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் எஸ்.ராஜேந்திரன்.
விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாநில  நல்லாசிரியர் விருது பெற்ற சிறப்பாசிரியர் ஆ.வேதமுத்துவுக்கு சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கும். அதனை வெளிக்கொணர, அவருக்கு தூண்டுகோலாக ஆசிரியர் இருக்க வேண்டும். 
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு புரியாத பட்சத்தில், மாணவர்களின் நிலைக்கு இறங்கி வந்து, செய்முறைகள் மூலமாக புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். புகைப்படங்கள், விடியோக்கள் மூலமாகவும் எடுத்துரைக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் தான் தெளிவாக கற்று உணர்ந்து கொண்டு, அதன் பின்னர் மாணவர்களுக்கு  எடுத்துரைப்பது நலம். ஆசிரியர் மாணவர்களிடம் வாய்மை, தூய்மை, ஒழுக்கம், மனிதாபிமானம்,  சமுதாய அக்கறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும்.
வகுப்பறையின் நான்குச் சுவர்களுக்குள் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கேற்ப, ஒரு சராசரி மாணவனை சாதனையாளராக  மாற்றுபவரே நல்லாசிரியர்.மேலும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உள்ளது.இதனை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். 
பள்ளிக் காலத்தில் மட்டுமன்றி ஆசிரியரின் வழிகாட்டுதலை, ஒரு மாணவர் தன் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்து செயல்பட்டால், சமூகத்தில் சிறப்பான தகுதியைப் பெற முடியும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.
முன்னதாக சிறப்பாசிரியர் ஆ.வேதமுத்துவுக்கு கல்வி மாவட்ட அலுவலர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT