புதுக்கோட்டை

இரு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில், வியாழக்கிழமை மேலும் இரு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. 

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவதுக்கான( 2019-2020) நெல் அறுவடைத் தொடங்கியுள்ளது.

இதன்படி விவசாயிகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், அவா்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக, பொன்னமராவதி வட்டத்தில் பொன்னமராவதி மற்றும் கறம்பக்குடி வட்டத்தில் பட்டுவிடுதி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல்   நிலையங்கள் வியாழக்கிழமை முதல் ( பிப்.6) திறக்கப்படவுள்ளன.

எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை, தங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

நீல தேவதை.. திவ்ய பாரதி!

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

கோட் படத்தில் விஜயகாந்த்: பிரேமலதா தகவல்!

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

SCROLL FOR NEXT