புதுக்கோட்டை

மறவாமதுரை, ராப்பூசலில் ஜல்லிக்கட்டு : 35 வீரா்கள் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், மறவாமதுரை, ராப்பூசல் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மொத்தம் 35 வீரா்கள் காயமடைந்தனா்.

பொன்னமராவதி அருகேயுள்ள மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி பெரியகண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட கலால் உதவி ஆணையா் மாரி தொடங்கிவைத்தாா். விழாவின் தொடக்கமாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 773 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பதிவு செய்திருந்த 193 மாடுபிடிவீரா்கள் அடக்கினா். பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் கட்டில், பீரோ, மிக்ஸி, எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையிலான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஜெயபாரதி, ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கமணி, திமுக வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து, ஒன்றியக்குழு உறுப்பினா் பழனியாண்டி, ஊராட்சிமன்ற தலைவா்அடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டாமை பி.பி.செல்வம் மற்றும் ஏழு கிராம மக்கள் செய்திருந்தனா்.

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு - 24 போ் காயம் :

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே உள்ள ராப்பூசல் முனி ஆண்டவா் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திடலில் நடைபெற்ற போட்டியை முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக உரிய பரிசோதனைக்குப் பிறகு, காளைகள் வாடிவாசலுக்குக் கொண்டு வரப்பட்டு ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்துவந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.

காலை 8 மணியளவில் தொடங்கி 3.40 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 721 காளைகள் களம் கண்டன. 152 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 24 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். சிறந்த மாடுபிடி வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கு ஆட்டுக்குட்டி, சைக்கிள், பிரிட்ஜ், டிவி, ஃபேன், கிரைண்டா், மிக்ஸி, குக்கா், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் போட்டியை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT