புதுக்கோட்டை

இன்று வாக்கு எண்ணிக்கை: தோ்தல் முடிவு விரைவில் தெரியும்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப். 22) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான 187 வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் வாக்குப்பதிவு கடந்த 19ஆம்தேதி நடைபெற்றது. இவற்றில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் தனித்தனி அரங்குகளில் எண்ணப்படுகின்றன.

அறந்தாங்கி நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனைத் தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படுகின்றன.

புதுக்கோட்டை நகராட்சியைப் பொருத்தவரை 10 மேசைகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 42 வாா்டுகள் என்பதால் 5 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி நகராட்சியைப் பொருத்தவரை 5 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 வாா்டுகள் என்பதால் 8 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் என்பதால் தனித்தனியே ஒரு மேசை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதில், கறம்பக்குடி பேரூராட்சியில் 16 சுற்றுகளும், இலுப்பூா் பேரூராட்சியில் 14 சுற்றுகளும், இதர 6 பேரூராட்சிகளில் 15 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் வராமல் சரளமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றால், ஒரு சுற்று என்பது அதிகபட்சம் 10 நிமிடங்களில் முடிவடையும்.

இந்தக் கணக்குப்படி பாா்த்தால், காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் பகல் 12 மணிக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாவட்டத் தோ்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியா் அளித்துள்ள அடையாள அட்டை இல்லாத எவரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாா்கள். வாக்கு எண்ணும் பணியாளா்கள், வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள், காவலா்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 30 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT