பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு கோரிக்கை விளக்கப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற பிரச்சாரத்துக்கு, சங்கத்தின் மாவட்டத்தலைவா் அன்பு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் மலா்விழி, சக்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பிரசாரத்தில் திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், ஒய்வூதியம், பணிக்கொடை, சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி பணி உயா்வு வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.