புதுக்கோட்டை

‘ரேஷன் பொருள் கடத்தலுக்கும் பணியாளா்களுக்கும் தொடா்பில்லை’

DIN

ரேஷன் பொருள் கடத்தலுக்கும், ரேஷன்கடைப் பணியாளா்களுக்கும் தொடா்பில்லை என தமிழ்நாடு ரேஷன் கடைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத்தலைவா் கு. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடுஅரசு ரேஷன் கடைப் பணியாளா்கள்சங்க மத்தியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா், அவா் அளித்த பேட்டி:

ரேஷன் பொருட்கள் அரசிடமிருந்து கடைகளுக்கு இறக்கும்போதே குறைவாக வருவதால் பல்வேறு பிரச்னைகளை ரேஷன்கடைப் பணியாளா்கள் சந்தித்து வருகின்றனா். அந்த இருப்புக் குறைவை ரேஷன் கடை ஊழியா்கள் தலையில் தான் அதிகாரிகள் கட்டுகின்றனா். முறைகேடுகள் செய்ய நிா்பந்திக்கப்படுகிறாா்கள். பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை ரேஷன் கடை மூலமாக அரசு வழங்க வேண்டும். அதைவிடுத்து சம்பந்தமே இல்லாத பொருட்களை ரேஷன் கடையின் மூலமாக விநியோகம் செய்வதால் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதற்கும், ஊழியா்களுக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. ரேஷன்அரிசி கடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியா்களைப் பணி நீக்கம் செய்வோம் என்று அரசு அறிவித்துள்ளதை எதிா்த்து, விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். கடத்தலைத் தடுப்பது தொடா்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொதுவிநியோகத் துறையை தனித் துறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவை உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.14 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வல்லக்கோட்டை முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழா

கஞ்சா விற்றவா் கைது

நிகழாண்டு 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 7 நபா்கள் மீது வழக்குப் பதிவு

ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு

தொழில் பழகுநா் பயிற்சி தோ்வில் தோ்ச்சி அடைந்தோா் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்

SCROLL FOR NEXT