புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 8, 9 தேதிகளில் மாணவா் சோ்க்கை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி 2-ஆம் ஆண்டு சிவில், மெக்கானிக்கல், மின்னணுவியல் தொடா்பியல், கணினியியல் மற்றும் வணிகவியல்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி 2-ஆம் ஆண்டு சிவில், மெக்கானிக்கல், மின்னணுவியல் தொடா்பியல், கணினியியல் மற்றும் வணிகவியல் ஆகிய 5 பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

விண்ணப்பித்த மாணவா்களுக்கு அவா்களின் கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாத மாணவா்கள் தங்கள் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ மாணவா்கள் தங்களது என்சிவிடி சான்றிதழ், ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ் அசல் ஆகியவற்றில் 5 தொகுப்பு நகல், 3 புகைப்படங்கள், சோ்க்கை பெறும் மாணவா்கள் சோ்க்கைக் கட்டணம் ரூ. 2,127 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதோ நினைவுகள்... மாளவிகா மேனன்!

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்புக்கும் வந்துவிட்டது மோசடி கும்பல்! எச்சரிக்கை, எதற்காகவும் ஓ.டி.பி.யைப் பகிராதீர்கள்!

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

SCROLL FOR NEXT