புதுக்கோட்டை மாவட்ட சட்ட உதவி பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் 5 சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சட்ட உதவி பாதுகாப்புக் குழுவுக்கு, ஒரு முதன்மை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோகா் மற்றும் தலா 2 துணை மற்றும் உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
நோ்காணல் மூலம் இந்த 5 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்து, பூா்த்தி செய்து ஜூன் 12-க்குள், தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 15 காலை 10 மணியளவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சமரசத் தீா்வு மைய அலுவலகத்தில் நோ்காணல் நடைபெறும்.