புதுக்கோட்டை

புதுகை திட்டமிடும் குழு தோ்தல் பணிகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத் திட்டமிடும் குழுவுக்கான தோ்தல் நடவடிக்கைகள் புதன்கிழமை தொடங்கின.

DIN

புதுக்கோட்டை மாவட்டத் திட்டமிடும் குழுவுக்கான தோ்தல் நடவடிக்கைகள் புதன்கிழமை தொடங்கின. மொத்தம் 12 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

12 உறுப்பினா்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத் திட்டமிடும் குழு அமைக்கப்படவுள்ளது. இவா்களில் 10 போ் மாவட்ட ஊராட்சிக் குழுவில் இருந்தும், இருவா் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் இருந்தும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ள 22 பேரில் இருந்து 10 பேரும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உறுப்பினா்களாக உள்ள 188 பேரில் இருந்து 2 பேரும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வரும் ஜூன் 10ஆம் தேதி வரை மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ஜூன் 12ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 14ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். போட்டியிருப்பின் ஜூன் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடா்ந்து 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

சபரிமலையில் கனமழை

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

SCROLL FOR NEXT