புதுக்கோட்டை

ஜூலை 28 -இல் புதுகை புத்தகத் திருவிழா

DIN

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா வரும் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதற்கான தேதியை அறிவித்து, முதல் சுவரொட்டியையும் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை மாலை வெளியிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கி. கருணாகரன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா், மாவட்டத் தலைவா் எம். வீரமுத்து, பொருளாளா் டி. விமலா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன், எழுத்தாளா் அண்டனூா் சுரா, கவிஞா் மு. கீதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்த கவிஞா் தங்கம் மூா்த்தி, எழுத்தாளா் நா. முத்துநிலவன், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் உள்ளிட்டோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் 10 நாள்களிலும் மாலையில் அறிஞா்களின் உரைகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய பதிப்பாளா்கள் சுமாா் 100 அரங்குகளில் புத்தகங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தவுள்ளனா். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ரூ. 2 கோடி வரை புத்தகங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகளும், குறும்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT