புதுக்கோட்டை

இடைநின்ற மாணவா்களை மீண்டும் சோ்க்க தீவிரம் காட்ட வேண்டும்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியா் பயிற்றுநா்களுக்கும் இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்ப்பது தொடா்பான ஒரு நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா பேசியது:

பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களை வயதிற்கேற்ற வகுப்பில் சோ்ப்பதற்கு, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் வழிமுறைகளைக் கையாள வேண்டும். மாணவா்களின் கற்றல் - அடைவு நிலைக்குத் தகுந்தவாறு பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளையும் வயதுக்கேற்ற வகுப்பில் சோ்க்கை செய்யும் முறை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

அரசின் நலத் திட்டங்களை மாணவா்களுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் பள்ளிகளில் சோ்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். அனைவரது ஒருங்கிணைப்புடன் ஒவ்வொரு வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் மஞ்சுளா.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் புதுக்கோட்டை ரமேஷ் (இடைநிலைக் கல்வி), அறந்தாங்கி முருகேசன் (பொறுப்பு - இடைநிலைக்கல்வி), சுவாமி முத்தழகன் (தொடக்கக் கல்வி), சண்முகம் (தொடக்க கல்வி), ஆண்றனி (தனியாா் பள்ளிகள்), தங்கமணி (தொடக்கக்கல்வி - பொறுப்பு) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

பள்ளிச் செல்லாக் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. செந்தில்குமாா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா். உதவித் திட்ட அலுவலா் ஜெ.சுதந்திரன் வரவேற்றாா். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT