புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியா் முருகேசன் தொடங்கி வைத்தாா். இதில், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 616 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக களமிறங்கிய 240 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் அடக்கினா். பல காளைகள் வீரா்களை பந்தாடிச்சென்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். பலத்த காயமடைந்த 5 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

SCROLL FOR NEXT