புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை- கீரனூருக்கு புதிய வழித்தட பேருந்து சேவை

DIN

கந்தா்வகோட்டையிலிருந்து கீரனூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்துச் சேவையை எம்எல்ஏ மா. சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல வணிக மேலாளா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இப்பேருந்து கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, வத்தனாக் கோட்டை, அண்டக்குளம், உப்பிலியக்குடி, இளையாவயல், குளத்தூா் வழியாக கீரனூா் சென்றடையும். இதனால் பல்வேறு பகுதி மக்களும் பயனடைவா்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம், ஒன்றியக் குழு உறுப்பினரும் அட்மா தலைவருமான மா. ராஜேந்திரன், வட்டாட்சியா் விஜயலட்சுமி, மாதா் சங்கப் பொறுப்பாளா் சாந்தி காா்த்திகேயன், எம்எல்ஏவின் நோ்முக உதவியாளா் இளையராஜா, கிளை மேலாளா் தாமோதரன், போக்குவரத்து தொழிலாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT