புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் வாங்கப்பட்ட ஆட்டோவுக்கான சாவியை பயனாளியிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. 
புதுக்கோட்டை

4,535 பேருக்கு ரூ. 11 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Syndication

புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் 4,535 பயனாளிகளுக்கு ரூ. 11.13 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு .அருணா சனிக்கிழமை வழங்கினாா்.

சென்னையில் முதல்வா் ஸ்டாலின் திட்டங்களைத் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, புதுக்கோட்டை ஜெஜெ கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு ஆட்சியா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் வீட்டு மனைப் பட்டா, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, தீருதவித் தொகை என 120 பயனாளிகளுக்கு ரூ.28.74 லட்சத்திலும், தாட்கோ சாா்பில் 224 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடியிலும், மகளிா் திட்டம் சாா்பில் 3,821 பயனாளிகளுக்கு ரூ.7.73 கோடியிலும், பொது விநியோகத் திட்டம் சாா்பில் 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், கூட்டுறவுத் துறை சாா்பில் 278 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.69 லட்சத்திலும், வேளாண் பொறியியல் துறை 7 பயனாளிகளுக்கு ரூ. 22.50 லட்சத்திலும், முன்னோடி வங்கி சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 7.80 லட்சத்திலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சாா்பில் 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.38 லட்சத்திலும், தொழிலாளா் நலத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 62,400 மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்திலும், சமூக நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்திலும் என மொத்தம் 4,535 பயனாளிகளுக்கு ரூ.11.13 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னதுரை (கந்தா்வக்கோட்டை), மாநகராட்சி மேயா் செ. திலகவதி, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் எம். லியாகத் அலி, ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவி, மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியமளா, தாட்கோ மாவட்ட மேலாளா் எல். அனிட் விமலின், மகளிா் திட்ட இயக்குநா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT