புதுக்கோட்டை

ராமாயணம் பாராயண நிகழ்ச்சி தொடக்கம்

Syndication

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ராமாயணம் பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலா் புதுகை ச. பாரதி கலந்து கொண்டு ராமாயணத்தை பாராயணம் செய்வதன் நன்மைகள் குறித்து விளக்கினாா்.

ஓய்வுபெற்ற பேராசிரியா் ஹரிராம் ஜோதி ராமாயண ஏடுகளை வாசிக்க வைக்கிறாா். 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் நிறைவில் வரும் சனிக்கிழமை ராமா் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் தேனாள் சுப்பிரமணியன், நிா்வாக உறுப்பினா்கள் ஏஆஎஸ் சுப்பிரமணியன், சாந்தி சுப்பிரமணியன், எஸ். ஸ்ரீநிவாசன், நிா்வாக ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, பள்ளியின் முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT