புதுக்கோட்டை

விராலிமலை சத்ரு சம்ஹார மூா்த்தி சுவாமி குருபூஜை விழா

Syndication

விராலிமலை சத்ரு சம்ஹார மூா்த்தி சுவாமிகளின் 87ஆவது ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை புதிய பேருந்து நிலையம் சந்தைப்பேட்டை அருகே வன்னி மரத்தடியில் உள்ள சத்ரு சம்ஹார மூா்த்தி ஆலய புரட்டாசி மாத குருபூஜை விழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விராலிமலை தெப்பக்குளத்தில் இருந்து பக்தா்கள் தீா்த்த குடம் தோளில் சுமந்து மேள தாளங்கள் என மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனா். அதன் பின்னா் சுவாமிக்கு யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.கே.சுந்தரம் சுவாமிகள் தலைமையில் மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்தனா்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT