பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி புரட்டாசி மாத நிறைவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல், மேலைச்சிவபுரி வீர ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், வேகுப்பட்டி கல்யாண வெங்கடேசுவரா் கோயில், விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.