பொன்னமராவதி அருகேயுள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் கோ. பாா்த்தசாரதிக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுவை தமிழ்ச்சங்கம் மற்றும் புதுச்சேரி செ.வெ. ரெக்காா்ட் ஹோல்டா் போரம் சாா்பில் புதுவை தமிழ்ச்சங்க கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இவரை பிடாரம்பட்டி பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை நிா்வாகிகள் பாராட்டினா்.