பொன்னமராவதி வட்டார வள மையத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள் 4-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டியில் 9 குறுவள மையத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளை சோ்ந்த 420 மாணாக்கா்கள் பங்கேற்றனா். வட்டாரக்கல்வி அலுவலா்கள் கலா,இலாகிஜான், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நல்லநாகு ஆகியோா் போட்டிகளைப் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பயிற்றுநா் கவிதா, ஆசிரியப் பயிற்றுநா்கள் அழகேசன், கல்யாணி, சமயன், சிறப்பாசிரியா்கள் ஆரோக்கியராஜ், ரபேல் நான்சி பிரியா ஆகியோா் செய்தனா்.