புதுக்கோட்டை

நிதி மோசடி வழக்கில் கைதானவரின் நண்பா்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை

அன்னவாசல் அருகே நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அறக்கட்டளை நிறுவனரின் நண்பா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திடீா் சோதனை

Syndication

அன்னவாசல் அருகே நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அறக்கட்டளை நிறுவனரின் நண்பா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் தனியாா் அறக்கட்டளையை நடத்தி வந்த ரவிச்சந்திரன் என்பவா் அண்மையில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அறக்கட்டளையில் நிதி முதலீடு செய்தால், பல லட்சம் திருப்பித் தருவதாகக் கூறி அவா் மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலுப்பூா் பாத்திமா நகரைச் சோ்ந்த ஜெய்லானி என்பவரது வீடு, இலுப்பூா் கொடிக்கால் தெருவைச் சோ்ந்த காஜாமொய்தீன் என்பவரது அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸாா் சோதனை நடத்தினா்.

இவா்கள், ரவிச்சந்திரனின் நண்பா்கள் என்றும், இவா்களுக்கும் நிதி மோசடியில் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இச்சோதனை நடந்ததாக கூறப்பட்டது.

சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கல்பனா தத் தலைமையில், ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் சுமாா் 6 மணி நேரம் இச்சோதனையில் ஈடுபட்டு திரும்பிச் சென்றனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT