புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கதண்டு கடித்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ரெத்தினக் கோட்டையைச் சோ்ந்தவா் எம். விஸ்வநாதன் (32). பாலைவனத்தைச் சோ்ந்தவா் ஏ. ஆறுமுகம் (55).
கட்டடத் தொழிலாளா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் மாங்குடி பகுதியில் சென்றபோது, தென்னந்தோப்பில் இருந்து பறந்து வந்த கதண்டுகள் இருவரையும் கடித்தன.
இதில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே விஸ்வநாதன் உயிரிழந்தாா். ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். அறந்தாங்கி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.