செங்கிப்பட்டி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியை மூட வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம்புதூர் பகுதியில் முதலைமுத்து வாரி உள்ளது.
இந்த வாரிக்கு 9 கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களில் பெய்யும் மழை நீராதாரமாக இருக்கிறது. இந்த வாரி வல்லம், வல்லம்புதூர், சென்னம்பட்டி, நாட்டாணி, குரும்பட்டி ஆகிய கிராமங்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் செயல்படும் செம்மண் குவாரியால் ஆங்காங்கே பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் இப்பள்ளங்களில் தேங்கிவிடுவதால், முதலைமுத்து வாரிக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே, இக்குவாரியை மூட நடவடிக்கை எடுக்குமாறு வல்லம்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனர். அதன்பிறகு மண் எடுப்பது நிறுத்தப்பட்டாலும், சில நாள்களாக மீண்டும் மண் எடுக்கப்படுகிறதாம்.
இதனால், அதிருப்தியடைந்த வல்லம்புதூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள் தச்சன்குறிச்சி குவாரியில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.