தஞ்சாவூர்

'பதின் பருவம் மாணவர்கள் வாழ்வின் திருப்புமுனை'

பதின் பருவமானது மாணவர்களின் வாழ்வின் திருப்புமுனை பருவமாகும்;

DIN

பதின் பருவமானது மாணவர்களின் வாழ்வின் திருப்புமுனை பருவமாகும்; அது வாழ்வையே புரட்டிப் போடும் பருவம் என்றார் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர்.
பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா மற்றும் சாதனை படைப்போம் வாரீர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
கிராமப்புற மாணவர்களை நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே ஜே.சி.குமரப்பா அறக்கட்டளையின் நோக்கமாகும். மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாக உருவாக்காமல், சவால்களை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றலும், தகுதியும் உள்ளவர்களாக உருவாக்கும் முயற்சியை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருகிறோம். நீட் தேர்விற்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். பதின் பருவம் வாழ்வை புரட்டிப் போடும் பருவம். இந்த வயதில் மாணவர்களை கண்காணித்து அவர்களை வழி நடத்திச் செல்வதில் பெற்றோர்கள் முறையாக கவனம் செலுத்த வேண்டும்.
சாதனை படைப்பது என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. முயற்சித்தால் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப சாதனை படைக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவிகள் கீதபிரேமி, பூமிகா, திவ்யப்பிரியா, அமிர்தா, ஆகாஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் பிரகாஷ் வரவேற்றார். முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து சேவை: அரசு தலைமைக் கொறடா தொடங்கிவைத்தாா்

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

SCROLL FOR NEXT