தஞ்சாவூர்

பிளாஸ்டிக் அரிசி புகார்: அரிசி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

பிளாஸ்டிக் அரிசி புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள அரிசி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

DIN

பிளாஸ்டிக் அரிசி புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள அரிசி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவது கண்டறியப்பட்டதால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரிசி கடைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, தஞ்சாவூரில் உள்ள அரிசி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ந. சந்திரமோகன், செ. ராஜ்குமார், த. கிருஷ்ணமூர்த்தி, இரா. விஜயகுமார், மு. வடிவேல், இரா. பாண்டி, ச. உமாகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ரமேஷ்பாபு தெரிவித்தது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளிலும், அரிசி ஆலைகளிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT