தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் பூதலூர் தெற்கு ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பூதலூர் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை ஒத்துழைப்புடன் நடைபெறும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 33 சத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி, தொடர்ச்சியாக 200 நாள் வேலையும், ரூ. 400 கூலியும் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை மூடக்கூடாது. தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும். குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும். முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை வழங்குவதை நிறுத்தக் கூடாது. குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் ஒன்றியத் தலைவர் என். வசந்தா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, செயலர் எஸ். தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலர் எஸ். மலர்கொடி,
விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. மருதமுத்து, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் எஸ். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.