தஞ்சாவூர்

குடந்தை அருகே நாளை அம்மா திட்ட முகாம்

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சரகம் பெரப்படி கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாமான அம்மா திட்ட முகாம்  ஜூன் 16-ம் தேதி நடைபெறுகிறது.

DIN

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சரகம் பெரப்படி கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாமான அம்மா திட்ட முகாம்  ஜூன் 16-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோயில் சரகம் பெரப்படி கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் ஜூன் 16-ம் தேதி நடைபெறுகிறது.
முகாமில் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர், மருத்துவர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே இந்தப் பகுதி தொடர்புடைய கிராம மக்கள் ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய சாதி, வருமான,இருப்பிடச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று போன்ற சான்றுகளுக்கான உரிய படிவத்தில் ஆதார ஆவணங்கள் இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனு செய்து சான்று பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT