தஞ்சாவூர்

தொழில் வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

அரசு அலுவலர்களுக்கு விதிக்கப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி அண்டு டி) வலியுறுத்தியுள்ளது.

DIN

அரசு அலுவலர்களுக்கு விதிக்கப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி அண்டு டி) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கழகத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்களை உடனடியாக தமிழக அரசு அலுவலர்களுக்குக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழில் வரியை அறவே ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசில் பணிபுரியக்கூடிய இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 என நிர்ணயம் செய்துள்ளது. இடைப்பட்ட அலுவலர்களுக்கு 58 வயது என உள்ளது.
மத்திய அரசில் உள்ளதுபோல அனைவருக்கும் பாரபட்சமின்றி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கழகத்தின் மாவட்டத் தலைவர் சதா. கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் தரும. கருணாநிதி, துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், பாலுராஜ், சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT