தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்திலுள்ள துரெளபதை அம்மன் கோயில் அருகேயுள்ள அரச மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் அந்தப் பகுதியினரை கடித்து வந்தன. இதுகுறித்து சரபோஜிராஜபுரம் விஏஓ கார்த்தி கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலானோர் மரத்தில் இருந்த நான்கு கூடுகளில் விஷ மருந்து தெளித்து மயங்கி விழுந்த விஷ வண்டுகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.