தஞ்சாவூர்

மதுக்கடை திறக்க எதிர்ப்பு : கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே புதிய அரசு மதுபானகடை திறக்க எதிப்பு தெரிவித்து அந்தப் பகுதி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர்.

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே புதிய அரசு மதுபானகடை திறக்க எதிப்பு தெரிவித்து அந்தப் பகுதி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர்.
பாபநாசம் அருகே வாழப்பழக்கடை கிராமத்தில் இயங்கிவந்த அரசு மதுக்கடை உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மூடப்பட்டது. இதையடுத்து நல்லூர் ஊராட்சிப் பகுதியில் எந்த இடத்திலும் அரசு மதுக்கடை திறக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நல்லூர் அருகே அரசு மதுக்கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்வதாகக் கிடைத்த தகவலையடுத்து பாபநாசம் - வலங்கைமான் பிரதான சாலையில் நல்லூர் பகுதியில் திரண்ட பொதுமக்கள் அப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த வலங்கைமான் வட்டாட்சியர் இஞ்ஞாசிராஜி,காவல் ஆய்வாளர் முருகேசன்,வருவாய் அதிகாரி ஆனந்தன், விஏஓ சத்தியஜோதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி அளித்த உறுதியையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT