தஞ்சாவூர்

ராயமுண்டான்பட்டியில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் என். சக்திவேல் தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட 34 மனுக்கள் தவிர, மேலும் 64 மனுக்கள் பெறப்பட்டன.
51 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 38 பேருக்கு ரூ. 3.38 லட்சத்துக்கான காசோலைகளும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ், பூதலூர் வட்டாட்சியர் கஜேந்திரன், துணை வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT