தஞ்சாவூர்

வறட்சியால் கருகிய பயிர்கள்: வயலுக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு

தஞ்சை மாவட்டம்,ஒரத்தநாடு அருகே பயிர்கள் கருகியதைப் பார்த்து மனம் உடைந்த விவசாயி புதன்கிழமை மயங்கிவிழுந்து இறந்தார்.

DIN

தஞ்சை மாவட்டம்,ஒரத்தநாடு அருகே பயிர்கள் கருகியதைப் பார்த்து மனம் உடைந்த விவசாயி புதன்கிழமை மயங்கிவிழுந்து இறந்தார்.
வெட்டுவாக்கோட்டை தட்டாங்கொல்லையைச் சேர்ந்த விவசாயியான கலைச்செல்வம் (48) . ஒரத்தநாடு வட்டம், திருவோணத்தை அடுத்த வெட்டுவாக்கோட்டை சூரியம்மன்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த ரவியின் நிலத்தில் குத்தகைக்கு கோடை நடவு  செய்திருந்தார். இந்நிலையில் ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை, மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் நெற்பயிர் நாளுக்கு நாள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலை வயலுக்குச் சென்ற கலைச்செல்வம் கருகிய நெற்பயிரை பார்த்து மனம் உடைந்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கலைச்செல்வம் இறந்தார். இவருக்கு மனைவி ஜெயமணி (44), பிரபாகரன் (24) பிரசாந்த் (23), பிரேமலதா (20) ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT