தஞ்சாவூர்

10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு நாகை மாவட்டம், சீர்காழிக்கும், சீர்காழி காவல் ஆய்வாளர் அழகுதுரை திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நன்னிலம் காவல் ஆய்வாளர் மணிமாறன் நாகை மாவட்டம் திருவெண்காடுக்கும், திருவெண்காடு காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் சென்பனார்கோவிலுக்கும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் ஆய்வாளர் செல்வம் நாகை மாவட்டம் ஏ.கே.சத்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏ.கே. சத்திரம் காவல் ஆய்வாளர் சிவபிரகாசம் திருவாரூர் மாவட்டம்,
குடவாசலுக்கும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மகாதேவன் கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்துக்கும்,
கும்பகோணம் கிழக்கு ஆய்வாளர் பெரியசாமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கும், மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT